வடக்கில் தொடர் மழை – மக்கள் அவதி!

Saturday, November 4th, 2017

நாட்டின் பல பாகங்களிலும் வளிமண்டல தாழமுக்கம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக யாழ். மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் தேங்கி நிற்பதால் தாள்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இருப்பிடங்களை விட்டு பொது இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர் தெரியவருகின்றது.

இதேவேளை கிளிநொச்சியில் பல பாகங்களிலும் 3 நாட்களாக கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மூன்று நாட்கள் பெய்த கடும் மழையில் 100 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. கிளிநொச்சி உள்ள குளங்கள் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரணைமடு குளத்தில் 7 அடியாக இருந்த நீர் சடுதியாக 13 அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இரண்டாம் இடைநிலைப் பருவப்பெயர்ச்சி காலநிலையாலேயே தற்போது மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. இதேவேளை மழைவீழ்ச்சி தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: