மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவபீடங்கள்!

Wednesday, August 2nd, 2017

சப்ரகமுவ, வயம்ப , மொறட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டு களுத்துறை, காலி, கண்டி, அனுராதபுரம் ஆகிய இடங்களில் தாதியர் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும். இதற்காக 250 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காலி மகமோதர பிரதேசத்தில் புதிய தாதியர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர்  இவ்வாறு குறிப்பிட்டார்.மருத்துவ கல்விக்கான குறைந்தபட்ச தராதரங்கள் இருவாரங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படுமென தெரிவித்துள்ளார். சில மருத்துவ சங்கங்கள் தனியார் கல்விக்கு ஆட்சேபம் தெரிவிக்கின்றன. ஆனால் வெளிநாடுகளில் தனியார் மருத்துவ கல்விக்கு பரந்தளவு இடம் உள்ளது. இங்கு கல்வி கற்ற பலர் இலங்கையில் மருத்துவர்களாக கடமையாற்றி வருகிறார்களென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: