வடக்கில் தொடர்ந்து சில தினங்களில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு – விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!
Thursday, February 10th, 2022
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.
இன்று 10.02.2022 வியாழக்கிழமைமுதல் 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை வரை மழை தொடலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ந்து 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
எனவே நெல் மற்றும் வெங்காய அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட்டு அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளுவது நன்மை பயக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் - பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி ...
இன்றுமுதல் நான்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதி அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் - எரிசக்தி அமைச்சர் காஞ்ச...
|
|
|


