வடக்கில் சோதனை செய்யப்பட்ட 12 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை- ஆ.கேதீஸ்வரன் – பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கென தனியான மூன்று தனிமைப்படுத்தல் மையங்கள் – வைத்தியர் உபுல் குணசேகர!

Tuesday, April 14th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்’கையில் குறித்த கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. அத்துர்டன் தற்சமயம் 155 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் 56 பேர் இதுவரையில் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதுடன் கொரோனா தாக்கத்தினால்  நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது

இதனிடையே சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட 12 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் தத்தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேகத்துக்குரியவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 12 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்;படுத்தப்பட்டன.

குறித்த 12 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேருவளை பன்வில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் முதலாவதாக முடக்கப்பட்ட பிரதேசமாகிய களுத்துறை அட்டுளுகம கிராமம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்த தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் பூரணமடைந்த நிலையிலேயே மேற்படி கிராமம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களை தனியான மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி வைத்தியர் உபுல் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த மூன்று மத்திய நிலையங்களும் அத்திடிய பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts: