வடக்கில் கடும் வரட்சி – 3 இலட்சம் பேர் பாதிப்பு!
Monday, May 27th, 2019
தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால் வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். வடக்கில் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலும் வரட்சியினால் பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
Related posts:
தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கூரைச் சூரியப் படல்கள்!
பாதுகாப்பு தலைமை அதிகாரி - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!
|
|
|


