வடக்கின் தேசிய பாடசாலைகளில் போலி 63 நியமனங்கள் – உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு!
Wednesday, June 13th, 2018
வடக்கில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு போலியாக வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
வடமாகாணத்து இளைஞர்களை ஏமாற்றி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஒரு நியமனத்திற்காக 3 முதல் 6 இலட்சம் ரூபா பெறப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மனிதப் புதைகுழி வழக்கு: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் பரிந்துரை நிராகரிப்பு!
தனியார் ஊழியர்களுக்கும் சலுகை இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி ச...
இலங்கை அருகே வளிமண்டலத் தளம்பல் - நாட்டின் பல பாகங்களில் சில தினங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு என...
|
|
|


