வடக்கின் தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் !

Wednesday, May 4th, 2016

வடக்கு மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேல் மாகாணசபையின் உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கவினால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டம் உள்ளட்ட திர்மானங்களை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல் மற்றும் சமஸ்டி ஆட்சி முறைமையை வழங்குதல் ஆகியன ஆபத்தானவை என நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

மொழியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டங்கள் பாதகமான நிலைமையையே ஏற்படுத்தும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts:

மின்மானி வாசிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாவனையாளர்களிடம் மின்சார சபை கோரிக்கை!
இடைக்கால அனர்த்த முகாமைத்துவ திட்டம் பரீட்சை ஆணையாளருக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணி...
போலியான குறுஞ் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக...