வடக்கின் கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
Tuesday, December 5th, 2017
தென்மராட்சிப் பிரதேச கடற்தொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என சாவகச்சேரி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இதனை சாவகச்சேரி பிரதேச செயலக இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. வட இலங்கைக்கு அப்பால் 200 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ள புயல் இன்று இரவு தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பிரதேச மீனவர்கள் பாதுகாப்புக் கருதி தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்பார்கப்படும் காற்று யாழ்.மாவட்டத்தின் ஏனைய கரையோரங்களிலும் தாக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Related posts:
பால் மா விலை அதிகரிப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை - நுகவோர் அலுவல்கள் அதிகார சபை!
வரி அறவீடு அதிகரிக்கப்படுவதே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் - நிதி அமைச்சர் அலிசப்ரி ச...
கட்டணம் செலுத்தாமை - 800,000 நுகர்வோரது மின்சார இணைப்பு துண்டிப்பு - பொருளாதார நெருக்கடியை தணிக்கும...
|
|
|


