வங்கி ஒப்பந்தப் படிவங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டால் கைச்சாத்திட வேண்டாம் – இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024

வங்கி ஒப்பந்தப் படிவங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டால் அதில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பின் (SLUNBA) பிரதித் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வர்த்தகர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றுமுதல் ஆங்கில கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம்.

டிசம்பர் 15 ஆம் திகதிவரை வங்கிகளின் பராட் உரிமையை நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவு செய்தபின், வங்கிகள் மக்களின் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டிற்குள் கணிசமான எண்ணிக்கையிலான வங்கிகள் இயங்கி வருவதால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) தங்களுக்கு கடன் வழங்க முடியாவிட்டால், அந்த வங்கிகளை உடனடியாக மூடுவதற்கான குறிப்புகளை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: