லைக்காவின் உரிமையாளர் சுபாஸ்கரன் இலண்டனில் கைது.
Friday, April 1st, 2016
இலண்டனில் பிரபலமான தொலைபேசி நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரும், இலங்கையைச் சேர்ந்தவருமான சுபாஸ்கரன் இன்டர்போல் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விடுதலைப் புலிகளின் பெருமளவு நிதியை பதுக்கிவைத்திருந்ததாகவும், கடனட்டை மோசடியில் ஈடுபட்டு அதனூடாக பெருமளவு பணத்தை சுருட்டிக் கொண்டதாகவும் சுபாஸ்கரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு மோசடி செய்த நிதியிலேயே விஜய் நடித்த ‘கத்தி” திரைப்படத்தை தயாரித்ததாகவும், தற்போது ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் எந்திரன் .2 படத்தையும் தயாரிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தெரிவிக்கும் தகவல்கள், இந்த லைக்கா நிறுவனம் இணையத்தில் ‘ ஆதவன் “தொலைக்காட்சி சேவையையும், இலங்கையில் ஞானம் பவுண்டேசன் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுபாஸ்கரன் இன்டர்போல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருக்கும் பொலிசார், லைக்கா நிறுவனத்தோடு தொடர்புபட்ட நிறுவனங்களில் பலரையும் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை இன்றைய ஏப்பிரல் பூல் தினத்தை மனதில் கொண்டு வாசித்து முடிக்கவும்.
Related posts:
|
|
|


