லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விற்பனை விலைப் பட்டியல் வெளியானது!

ஒவ்வொரு மாவட்டத்திலும் விற்கப்பட வேண்டிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டது.
இதனடிப்படையில், தற்போது மாவட்ட ரீதியான விற்பனை செய்யப்பட வேண்டிய விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,617முதல் 1,431 ரூபாவுக்கிடையில் விற்கப்படவுள்ளது.
மேலும், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகும்.
மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகும்.
உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|