லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

நள்ளிரவுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது 100 முதல் 200 வரை விலை குறைப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை 99 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 45 ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓமந்தை புகையிரத - சுவீடன் கொண்டு செல்லப்படும் சிறுமி!
குழந்தை அத்தியவசியமற்றதானால் அரசிடம் ஒப்படையுங்கள் - சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!
13 - 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|