லக்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுது – டீசல் இல்லை – மின்சார சபையிடம் பணமும் இல்லை – மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டியதன் நிலைமையை விளக்கினர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

லக்க்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்துள்ளதாலும் டீசல் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபையிடம் போதிய பணம் இல்லாததாலும், நீர் மின்சாரத்தை உரிய முறையில் முகாமைத்துவப்படுத்த முடியாததாலும் மின்வெட்டை நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயின் தரம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மரக்கறிச் செய்கைகளில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபாடு!
வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்த...
|
|