ரெட் விங்ஸ் விமானம் மத்தளவுக்கு சேவைகளை ஆரம்பித்தது – முதல் விமானம் தரையிறங்கியது!
Thursday, December 29th, 2022
ரஷ்ய விமான சேவையான ‘ரெட் விங்ஸ்’ இன் முதலாவது விமானம், இன்று காலை 9.44 அளவில் 398 பயணிகளுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தின் வருகையுடன், 2 வருடங்களின் பின்னர் மத்தள விமான நிலையத்தின், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாஸ்கோவை தளமாகக் கொண்ட ரஷ்ய பிராந்திய விமான சேவையான ரெட் விங்ஸ், வாரத்திற்கு இரண்டு முறை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
ரெட் விங்ஸ் விமானங்கள், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், விமானங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளது.
இலங்கைக்கு நேரடி விமான சேவையை வழங்கும் மூன்றாவது ரஷ்ய விமான சேவை இதுவாகும்.
ரஷ்யாவின் அஸூர் எயார் மற்றும் ஏரோப்ஃளொட் ஆகியன இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுத்துள்ள ஏனைய இரு நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


