ரூபாவின் பெறுமதி ஸ்திரமான நிலையில் – நிதி அமைச்சர்

ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களை மேற்கொள்ள போதியளவு பணம் உள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது. அந்நிய செலாவணி ஒதுக்கம் குறைவடையவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் பணம் வரவுள்ளது. நாட்டுக்கு வரும் ஒவ்வொரு சதமும் நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும். இதனிடையே, ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது அமெரிக்க டொலரின் பெறுமதி 144 ரூபாவாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் இரங்கல்
12 ஆம் திகதி பொது விடுமுறறாயக அறிவிக்கப்பட்டாலும் திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் - மோட்டா...
அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|
வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு கட்டுப்பாடு - பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமர...
எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு - உள்ளூராட்சி ஆணையாளர் அறிவிப்பு!
நாட்டில் சுமார் 7,000 வீதி நிர்மாண திட்டங்கள் திடீரென இடைநிறுத்தம் - நிதியின்மையால் நெருக்கடி என தகவ...