ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத வகையில் பாரிய வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, வரலாற்றில் முதல்முறையாக 155 ரூபாவைத் தாண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.
Related posts:
வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகள்!
ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்க்க குழு நியமனம்!
பலத்த காற்று வீசக்கூடும் –இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!
|
|