போதைப்பபொருள் பாவனையிலிருந்து மக்களை மீட்டி அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு வழிமுறையை கொண்டிருக்க வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் அமீன் வலியுறுத்து!

Wednesday, August 16th, 2023

போதைப்பொருட்களின் பாவனையில் இருந்து எமது மக்களை விடுவிக்க கிராமத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்த ஒரு வேலை வழிமுறையை கொண்டிருக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்துள்ளார்.

உருத்திரபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கான புத்தெழுச்சி குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உருத்திரபுரம் ஆற்றங்கரை பகுதிகளில் அதிகரித்து செல்லும் கசிப்பு உற்பத்தி முயற்சிகளை கட்டுப்படுத்துவதில் பொலிசாரும் பொது அமைப்புக்களும் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்தில் எடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்;

பொது மக்கள் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் உயிர் அச்சுறுத்தல்களையும் கூட எதிர்கொள்வது பலராலும் அறியப்பட்ட விடயம்.

இதில் கிடைக்கும் வருமானங்களை நம்பி வாழும் வறிய குடும்பங்கள்  இத்தொழிலின்  அடித்தளமாக இருந்து வருவது துர்ப்பாக்கியமான ஒரு நிலையாகும்.

இதற்கான மாற்று வழிமுறையாக அந்தந்த கிராமங்களின் வள வாய்ப்பு நிலமைகளை கவனத்தில் எடுத்து பொருத்தமான மாற்று தொழில்  மற்றும் உற்பத்திக்கான வழி மூலங்கள் சாத்தியமாகும் போதே இந்த போதைப் பொருள் உற்பத்தியையும் அதன் விநியோகத்தையும் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்.

கட்டுப்பாடற்ற சட்ட விரோத மதுப்பாவனைகள் குடும்பங்களுக்குள் மட்டுமன்றி  அவர்களின் வாழ்விடச் சூழலிலும்  ஒருவித அமைதியின்மையை உருவாக்கி விடுகிறது.

இதனால் வீடுகளில் மாணவர்களின் கல்வி சூழல் பாதிக்கப்படுவதுடன்      கட்டுப்பாடற்ற இளைஞர் வன்முறைக் குழுக்களுடன் மாணவர்களும் இணைய முற்படும் ஆபத்தான நிலைமைகளும் பின்தங்கிய கிராமங்களில் பரவலாக அவதானிக்கப்பட் டுள்ளன.

இதன் முடிவாக கல்வி,  உழைப்புக்கள் அற்ற அவ்வாறே உற்பத்திகள் எதுவும் அற்ற சமூகப் பிறழ்வான நடத்தை வெளிப்பாட்டை கொண்ட புதிய சமுக அணியின் உருவாக்கத்துக்கு இது வழிவிடுவதாக இந்த போதைப் பொருள் பாவனைகள் அமைந்து விடுகின்றன.

இந்த ஆபத்தான சூழலை  எதிர் கொள்ள முன்னுதாரணமான இளைஞர்கள் அணியை உள்ளடக்கி  ஒரு  செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

இதன் மூலமே சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் பாவனையில் இருந்து விடுபட்ட சமூகத்தை பாதுகாப்பதும் வளர்த்தெடுப்பதும் சாத்தியமாகுமென  அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அமரர் பாலேந்திரன் தங்கரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி ...
ஒரே நாளில் உலகின் பலம்பொருந்திய பல நாடுகளின் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு - பசுமைப் பொருளாதாரத்தை கட...
இல்ல விளையாட்டுப் போட்டிகளை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடத்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்...