ரஷ்ய – வடகொரிய தலைவர்கள் செப்டம்பரில் சந்திப்பு!

Sunday, June 17th, 2018

மாஸ்கோவில் புடின்-வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு செப்டம்பரில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப்-கிம் சந்திப்பையடுத்து வடகொரியா மீதான உலகின் பார்வை மாறியுள்ளது.

இதுவரை அச்சத்துடன் கிம்மை பார்த்து வந்த நாடுகள் சந்தேக கண்ணோடு பார்க்க துவங்கியுள்ளன. வல்லரசு நாடுகள் கிம்முக்கு முக்கியத்துவம் தர முன்வந்துள்ளன. ஏற்கனவே சீனாவுடன் நல்ல நட்பில் இருந்த கிம்மிற்கு தற்போது ரஷ்யாவும் நேசக்கரம் நீட்டியுள்ளது.

வடகொரிய மூத்த அதிகாரி கிம் யோங் நம்மை மாஸ்கோவில் புடின் சந்தித்துப் பேசினார். அப்போது வடகொரியாவுடனான உறவை விரும்புகிறேன்  கிம் ஜோங் உன்னை ரஷ்யாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்வதாக புடின் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு செப்டம்பரில் இருக்கும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Related posts:

“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ...
பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு...
நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட...