ரஷ்ய இராணுவ தளபதி –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு!
Thursday, February 6th, 2020
ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஜெனரல் ஒலேக்வுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேநேரம், ரஷ்ய இராணுவ தளபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குவதற்கு ரஷ்ய இராணுவ தளபதி இணங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுகாதார பணியாளர்கள் நாடுதழுவிய ரீதியல் பணிபகிஷ்கரிப்பு!
வடக்கில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தச் சிறப்புத் திட்டம்!
ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
|
|
|


