ரஷ்யா – உக்ரைன் போர் இலங்கைக்கு சாதகமாக உள்ளது – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தெரிவிப்பு!
Friday, March 4th, 2022
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வெதுவெதுப்பான நீருடன் கூடிய கடல், இலங்கைக்கு நல்லதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இணையச் சேவை ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்று சகோதரர்களும் நாட்டை ஆட்சி செய்யும் விதம் சரியானது எனவும் அதில் தவறில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரியர் நியமனங்கள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியும் - இராஜாங்க கல்வி அமைச்சர் !
பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி கிராம மட்ட அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு!
வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 24 ஆம் திகதி உறுதிப்படுத்த நடவடிக்கை!
|
|
|


