ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளது – ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது என இலங்கை அறிவிப்பு!
Saturday, September 23rd, 2023
ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே இக்கட்டான காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு எவ்வாறு உதவியது என்பது நன்றாக ஞாபகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய – இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் வைத்து இலங்கை தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்த...
கொரோனா வைரஸ் : இலங்கையை தாக்கினால் பாரிய ஆபத்து - சுகாதார சேவை இயக்குனர் நாயகம்!
மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை – நெடுஞ்சாலைகள் அமைச்னரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகா...
|
|
|


