ரஷ்யாவிற்கான வணிக பிரிவு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் – ரஷ்ய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

இடைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான ஏரோப்ளோட் விமான சேவையின் வணிக பிரிவு விமான சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
ஏரோப்ளோட் நிறுவனம் மற்றும் விமான நிலைய தகவல் மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கமைய ரஷ்யாவின் மொஸக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ள முதலாவது வணிக விமானம் இன்று முற்பகல் 10.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் இலங்கைக்கு ரஷ்ய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
எரிபொருள் விலை: செலவு விவரத்தை வெளிப்படுத்தினார் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர!
தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செயற்றிட்டம்!
நாட்டின் அபிவிருத்திக்குத் தமிழர்களின் பங்களிப்பு மிக அவசியம் - பிரதமர் வலியுறுத்து!
|
|