ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியது இலங்கை!
Thursday, March 3rd, 2022
ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.
மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இவ்வாறு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள ரஷ்யாவிடமே இலங்கை அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுதுமலையில் நேற்றிரவு வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்!
வாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளிய...
|
|
|


