ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை!
Tuesday, April 17th, 2018
இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.
பயணிகள் இந்த டச் அட்டையை கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த அட்டையில் குறைத்துக் கொள்ளப்படும்.
இலங்கை மத்திய வங்கியும் போக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை பேய் (Pay) நிறுவனமும் ஒன்றிணைந்து குறித்த அட்டையை தயார் செய்வதாக தேசிய போக்குவரத்துஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.
குறித்த இலத்திரனியல் அட்டை முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகளுக்கு மிகுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரச்சினையை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8ஆம் திகதிவரை நீடிப்ப...
கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு!
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|


