யுத்தத்திற்கு பின்னர் 1,30 000 க்கும் அதிகமானவர்கள் மீள்குடியேற்றம்!

Friday, December 30th, 2016

1911897270Untitled-7

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீள குடியரமர்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளி விபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

42 ஆயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர் என்று  கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.

இதன்பிரகாரம் கரைதுறைப்பற்றில் 13 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 79 பேரும், புதுக்குடியிருப்பில் 12 ஆயிரத்து 918 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 14 பேரும் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 5 ஆயிரத்து 961 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 415 பேர் மீள் குடியமர்ந்துள்ளதாக மாவட்ட புள்ளவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துணுக்காயில் 3 ஆயிரத்து 786 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 856 பேரும் மாந்தை கிழக்கில் 2 ஆயிரத்து 933 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 197 பேரும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வெலிஓயா எனப்படும் மணலாறு பிரதேச செயலகப் பிரிவில் 3 ஆயிரத்து 336 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 189 பேர் குடியமர்ந்துள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

1911897270Untitled-7

Related posts:

தேர்தல் தொடர்பில் அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது – நாடாளுமன்ற தேர்தல் குறித்து...
வீடுகள் தோறும் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க உடனடி நடவடிக்கை - வேலணை பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்; இவ்வருடம் 7 பில்லியன் டொலர் எதிர்பார்ப்பு - ஜனவரி மாதம் 500 மில். டொலர...