யுத்தத்தின் விளைவு – வடக்கில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் வீதம் அதிகரிப்பு!

Tuesday, December 4th, 2018

யுத்தத்தின் பின்னர் வடக்கு பகுதியில் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக ஜெப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எமது நிறுவனத்தில் யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனத்தின் ஊடாக செயற்கை அவயங்கள் பொருத்தி உள்ளோம்.

யுத்தத்தின் பின்னரான கால பகுதியில் விபத்துக்கள் மூலம் அதிகளவானவர்கள் அவயங்களை இழந்த நிலையில் செயற்கை அவயங்களை எமது நிறுவனத்தின் ஊடாக பொருத்தியுள்ளனர். இதேவேளை நீரழிவு நோய், முடக்கு வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவயங்களின் செயற்பாட்டை இழந்தவர்கள் பயன்பெற்று உள்ளனர்.

அத்துடன் யுத்தத்தின் பின்னரான கால பகுதியிலேயே அவயங்களை இழந்த நிலையிலும், அவயங்கள் செயற்பாடாத நிலையிலும் குழந்தைகள் பிறக்கின்றனர்.

அதற்கான காரணங்கள் இதுவரை ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்படவில்லை. ஆனால் தாய்மார்கள் யுத்ததிற்கு முகம் கொடுத்தமையால், ஏற்பட்ட பாதிப்புக்களாக இருக்காலம் எனும் சந்தேகம் உள்ளது என தெரிவித்தார்.

Related posts:

எதிர்த்து வாக்களித்தது ஈ.பி.டி.பி - யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 5 மேலதிக வாக்குக...
உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை - தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்...
118 என்ற பொலிஸ் துரித இலக்கத்துக்கு வழங்கப்படும் தவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது - பொலிஸ் ஊடகப் பேச...