யுக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம் – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022

யுக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பினை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், பல நாடுகள் தங்களது பிரஜைகளை உடனடியாக உக்ரேனை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்தநிலையில் உத்தியோகப்பூர்வ தரவுகளுக்கு அமைய 40 இலங்கையர்கள் தற்போது யுக்ரைனில் உள்ளனர். அவர்களில் 7 பேர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக அங்கு சென்றுள்ளனர.

யுக்ரைனில் இலங்கை தூதரகம் இல்லாத போதிலும், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் துருக்கி – அன்காராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தகவல்களுக்கு அமைய யுக்ரைனில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் உடனடியாக அங்குள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: