யாழ்.வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம், நெடுந்தீவு ஆகிய கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது 

Thursday, March 2nd, 2017

யாழ்.வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம், நெடுந்தீவு ஆகிய கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் நேற்றுப் புதன்கிழமை(01) இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களும் யாழ்.நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மீனவர்கள் அனைவரையும் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிலைக் கேணி சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மீனவர்களிடமிருந்து  ஒரு படகும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஒரு படகும் மீட்கப்பட்டுள்ளதாக  யாழ்.நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாட்டின் புதுக் கோட்டை, இராமேஸ்வரம், ஜகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
3532178000000578-3638147-Taking_love_to_new_heights_After_landing_each_of_the_newlywed_pa-a-43_1465774022612

Related posts: