யாழ் மாவட்ட மக்களால் பெருமிதம் கொள்கின்றோம் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021

யாழ்ப்பாணம் மக்களால் பெருமிதம் கொள்வதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதனைக் குறிப்பிட்டு சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

“கடந்த வாரம் சீன மக்கள் நன்கொடையளித்த சினோபார்மின் 50 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் யாழ்ப்பாணம் மக்களைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்.

அதேவேளை, முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர் ஆகியோருக்கும் மரியாதை செலுத்துகின்றோம்” – என்று பதிவிடப்பட்டுள்ளது.

Related posts: