யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!
Monday, November 5th, 2018
யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரி அலன்ரின் ஆகியோருடனேயே குறித்த தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன்போது கடந்த காலங்களில் தாம் முன்னெடுத்த செயற்பாடுகளில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் இதனால் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன் குறித்த தொழில் சங்கத்தினர், தற்போது மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தமது பிரச்சினைகளுக்கு நிச்சயமாக நிரந்தர தீர்வகளை பெற்றுத்தர முடியும் என்றும் தெரிவித்ததுடன் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
குறித்த தொழில் சங்கத்தினரது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


