ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்? விரைவில் அம்பலப்படுத்துவேன் என்கிறார் கோத்தபாய!

Monday, August 26th, 2019


ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஏப்ரல் 21  தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என அதிருப்தி வெளியிட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதுகுறித்து விசாரிக்க சுயாதீன விசாரணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டும் என கோரியிருந்தார்.

இந்தநிலையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கர்தினால் மெல்கம் ரஞ்சித் கிறிஸ்தவர்கள் சார்பாக மட்டுமல்லாமல் அனைத்து இலங்கையர்களின் சார்பிலேயே அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்களையும் தாக்குதல்களுக்கு சதி செய்த மற்றும் நிதியுதவி செய்தவர்களையும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியவர்கள், பரிந்துரைகளைச் செய்தவர்களையும் அடையாளம் காண விசாரணைக் குழுவை அமைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன், ஈஸ்டர் படுகொலைகள் குறித்து விசாரிக்கவும் அனைத்து இலங்கையர்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் ஒரு சுயாதீன விசாரணைக்குழு நியமிக்கப்படுவதை உறுதி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

Related posts: