யாழ். மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபா நிதியில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இடர்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது – மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020

யாழ். மாவட்டத்தில் 900 மில்லியன் ரூபா நிதியில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து எண்நூற்று மூன்று குடும்பங்களுக்கும் அதிகமானோருக்கு இடர்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டதாக யாழ்மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுகன்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் –

குறிப்பாக சமுர்த்தி பயனாளிகள் 76 ஆயிரத்து நாற்பத்து எட்டு குடும்பங்கள், சமுர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ள 11 ஆயிரம் குடும்பங்கள், நாளாந்தம் தொழில் செய்து குடும்ப வருமானம் ஈட்டும் 39 ஆயிரத்து 617 குடும்பங்கள்,  மற்றும் வெளியிடங்களில் இருந்து வந்து பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 38 பேர், முதியோர் 23 ஆயிரத்து 437 பேர், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரத்து 454 பேர், சிறுநீரக நோயாளிகள் 441 பேர் என ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து எண்ணூற்று மூன்று குடும்பங்களுக்கு மற்றும் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் சுமார் 900 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

இதனிடையே நாட்டில் அசாதாரண நிலைமை உருவாக முன்னர் யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தமது செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுகன்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்

யாழ்ப்பாணத்தில் கடந்த பங்குனி மாதம் 20 திகதி தொடக்கம் இன்றைய நாள் வரை தங்கியுள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த 5000 பேர் தத்தமது இடங்களுக்கு செல்ல அனுமதிக்காக  விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அத்தியாவசியமாக செல்ல வேண்டிய சுமார் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாகவும் சிலர் அனுப்பப்படவுள்ளனர் என தெரிவித்த அரச அதிபர் அதி இடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதய சூழ்நிலையில் அவர்களது  இடங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts:


தாயக மண்ணின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி மிளிர்கிறது - கட்சியின் சர்வதேச அமைப்பாளர் ...
நானாட்டான் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்தி தீர்வு பெற்று தாருங்கள் – அமைச்...
கடமையில் ஈடுபடும் பொலிசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம...