யாழ்.மாநகரப் பகுதியில் ஆண்டின் முதல் 5 நாள்களில் டெங்கினால் 40 பேர் பாதிப்பு!

Friday, January 11th, 2019

யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் இந்த ஆண்டின் முதல் 5 நாள்களில் மட்டும் 40 பேர் வரை டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் 569 பேர் குறித்த பிரதேசத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஜனவரி மாதத்தில் 128 பேரும், பெப்ரவரி 53, மார்ச் 37, ஏப்ரல் 15, மே 21, ஜீன் 39, ஜீலை 33, ஓகஸ்ட் 13, செப்ரெம்பர் 7, ஒக்ரோபர் 10, நவம்பர் 40, டிசெம்பர் 173 பேருமாக மொத்தம் 569 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் 905 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டனர். இந்த புள்ளி விபரங்களின்படி கடந்த 2018 ஆம் ஆண்டு டெங்கின் தாக்கம் குறைவாகக் காணப்படுகின்றது. டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் விழிப்புணர்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் மாநகர சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேலணை பிரதேச சபையால் பல்வேறு சுகாதார முன்னேற்பாடுகள் முன்னெடுப்பு!
பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுங்கள் – துறைசார் தரப்பினருக...
இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது ஐ.நா.வின் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு குழு!