யாழ் மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு மக்கள் பாதிப்பு!
Monday, March 27th, 2017
வறட்சியான காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களுக்கான குடிநீர் வசதிகள் பவுசர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாக நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 40 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். நகரப் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக் கூரை உடைத்து 50 பவுண் நகை கொள்ளை!
அரபு மொழியிலுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்றுநிருபம் வெளியீடு!
நல்லாட்சி காலத்தின் தூரநேக்கற்ற அனுமதிகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று பிரச்சினைகளுடன் வாழவேண...
|
|
|


