யாழ். மாவட்டத்தில் இதுவரை பதிவு மேற்கொள்ளாத வாக்காளர்களைப் பதிவு செய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால் பிரதேச செயலர்களிடம் வலியுறுத்து!

2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் மீளாய்வுக்குரிய கணக்கெடுப்பு ஆவணங்கள் தேர்தல்கள் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதன் பின்னரும் கிராம அலுவலகர்களுக்குப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கின்ற கணக்கெடுக்கும் படிவங்களைக் கிராம அலுவலர்களின் பரிந்துரையுடன் தாமதியாது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் படி, இதுவரை பதிவு மேற்கொள்ளாத வாக்காளர்களைப் பதிவு செய்யுமாறு கிராம அலுவலர்களினால் கேட்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை வாக்காளர்களாகப் பதிவு மேற்கொள்ளாதவர்கள் கிராம அலுவலரிடமிலிருந்து UE படிவமொன்றினைப் பெற்றுப் பூரணப்படுத்தி இம்மாதம்-26 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
வாகனப் பதிவு நடவடிக்கைகளில் மிகப்பெரும் மோசடி!
2018இல் உலகப் பொருளாதார மாநாடு இலங்கையில்!
பயணச்சீட்டுக்களை நான்கு விதமாக விநியோகிக்க நடவடிக்கை – தொடருந்துத் திணைக்களம்!
|
|