யாழ்.மாநகர சபையில் நடந்த மோசடி விசாரணைகள் இழுத்தடிப்பு:  ஆணையாளர் குற்றச்சாட்டு!

Thursday, January 5th, 2017

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்ற 21இலட்சம் ரூபா மோசடி குறித்து சபையின் சார்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், அது தொடர்பில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. என மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் சபை மேற்கொண்ட சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் ஆணையாளர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் மாநகர சபையில் கடந்த வருடம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் 21லட்சம் ரூபாவை மோசடி செய்தமை உள்ளகக் கணக்காய்வு மூலம் தெரியவந்தது. அது தொடர்பில் மாநகரசபையின் சார்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடந்த ஓக்டோபர் மாதம் ஆரம்பத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டுக்கு இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

யாழ்ப்பாணம் பொலிஸார் ஆரம்ப விசாரணைகளையோ அல்லது ஆவண பரிசோதனையோ மேற்கொண்டதாகத் தெரியவல்லை. சட்ட ரீதியிலான விசாரணை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் மோசடி தொடர்பில் உடனடியாகவே திணைக்களத்துக்கு எழுத்தில் முறையிட்டிருந்தோம். அதன் பிரகாரம் திணைக்களத்தால் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவர்களால் கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கி பெண் உத்தியோகத்தருக்கு எதிரான குற்றப்பகிர்வு பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திணைக்கள ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என்றார்.

MUNICIPAL

Related posts: