நாடாளுமன்றத்தை மறுசீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு அநாவசியம் – அமைச்சர் சஜித்!

Tuesday, April 24th, 2018

மக்களின் பிரதிநிதிகள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை மறுசீரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவில் வீடில்லாத 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியை மறுசீரமைப்புச் செய்ய இவ்வளவு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவது அநாவசியமானது.

மக்கள் நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கேயன்றிச் சொகுசு கொண்டாடுவதற்கல்ல.

இதற்கு ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவும் எனது அமைச்சுக்கு வழங்கப்பட்டால் 25 வீடுகளைக் கொண்ட 80 கிராமங்களை உருவாக்க முடியும் என்றார்.

Related posts: