இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம் – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

Friday, October 29th, 2021

இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம், தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நிலைகொண்டுள்ளதால் இன்று) நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் மேகமூட்டமான காலநிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts:

சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல - கல்வி முறையில் மாற்றம் கொண்ட...
இலங்கையர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம் - வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு!
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை - விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அறிவிப்பு...