கைத்தொலைபேசிகளில் விபர கணக்கெடுப்பு !

Tuesday, May 2nd, 2017

புள்ளியியல் திணைக்களம்  மக்கள் தொகை கணக்கெடுப்பை கைபேசி ஊடான இணைய சேவை  ஒன்றையும் ஆரம்பித்துள்தாக  அறிவித்துள்ளள்ளது. கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி முதல் ‘Lanka Stat’ எனும் பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையானது ஆரம்பக் கட்டமே  எனவும் தற்போது Android operating system வழியாக அணைத்து ஸ்மார்ட் போன்களிலும் டப்லட்களிலும் தரவிறக்கம்  செய்து பயன் படுத்தலாம் எனவும் தினைக்கள அதிகாரி ஒருவர் தெரவித்தார்.

எமது திணைக்களம் வெளியிடுகின்ற மக்கள் தொகை மற்றும் சமூகப் பொருளாதார தரவுகள் போன்றவற்றை மக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வாய்பை அதிகரிப்பதர்க்காகவே இந்த சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாகவும் அந்த  அதிகாரி தெரவித்தார்.
மேலதிகமாக LankaStatMap என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்ட்டுள்ள இணையத் தளத்தை  map.statistics.gov.lk என்கின்ற இனைய முகவரியயூடாக  பார்வையிட்டு தகவல்களை பிரதேச வாரியாகவும் பெற்றுக் கொள்ள  முடியும் எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: