யாழ் மாநகரப் பகுதி வெள்ளத்தில் மிதந்தமைக்கு பொதுமக்களின் சமூக அக்கறையின்மையே பிரதான காரணம் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Monday, December 21st, 2020

அண்மையில் பெய்த கடும் மழை யாழ். குடாநாட்டை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. அத்துடன் மக்களின் குடிமனைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மக்கள் இடம்பெயர்ந்து பாரிய இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலைமைக்கு யாழ் மாநகரின் திட்டமிடப்பாத வடிகாலமைப்பு இருந்தாலும் நிலைக்கு வெறுமனமே அரச தரப்பையோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களையோ குற்றஞ்சாட்டி விட்டு இருப்பது ஆரோக்கியமானதாது என்பதை யாழ் மாநகர சுகாதார ஊழியர்கள் நிரூபித்துள்ளதுடன் என சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்களின் சமூக அக்கறையின்மையே இதற்கு பிரதாக காரணமாக உள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதாவது, யாழ்ப்பாணம் மாநகரில் கழிவுநீர் வாய்க்கால்கள் சுகாதாரத் தொழிலாளிகளால் கழிவுப் பொருள்கள் நேற்றையதினம் (டிசெ.20) அகற்றப்பட்டுகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாநகரின் போதனா வைத்தியசாலை வீதியில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டபோது குறிப்பாக கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் மலைபோல குவிந்திருந்நதால் நீர் வழிந்தோடு செயற்பாடு பாதிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.. இதுவே வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டமைக்கு பிரதாக காரணமாகியுள்ளது.

குறிப்பாக யாழ்.நகரில் மின்சார நிலைய வீதி, ஸ்ரான்ஸி வீதி, யாழ்.பேருந்து நிலையப் பகுதிகளுக்குள் மழை வெள்ளம் வரக் காரணமான, நவீன சந்தைக்குக் கீழாக உள்ள கால்வாயில் வெற்றுப் போத்தல்கள், பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளது. இதுவே இந் பகுதி மூடப்படுவதற்கும் காரணமாகியிருந்தது.

அந்தவகையில் இதற்குக் காரணம் யார்? இந் நிலைமை யாரால் உருவாக்கப்பட்டது? என்பதற்கு தாங்களெ பிரதான காரணம் என்பதை பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே இனிவரும் காலங்களிலாவது சமூகப் பொறுப்பாக நடந்து கொள்வதுடன், கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்றுவதற்கு மக்களும் முயற்சிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: