யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
இதன்படி, காந்த ஒத்திசைவு படமெடுத்தல் (MRI scanner) மற்றும் கணினி வரைவி படமெடுத்தல் (CT scanner) போன்ற ரூபா 100 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை யாழ் போதனாவைத்தியசாலைக்கு வழங்க இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் கலந்துக் கொள்வதற்காக 60 சுகாதார ஊழியர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
நவீன வைத்திய முறைகளினால் மாற்ற முடியாத நோய்கள் சுதேச மருத்துவம் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது : வடக்கு ...
தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபா!
பொருளாதார நெருக்கடியை வென்று மீண்டும் நாட்டில் அபிவிருத்தி போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது - ...
|
|