யாழ். போதனாவில் மீண்டும்  “பாஸ்” நடைமுறை!

Saturday, January 26th, 2019

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான பாஸ் நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று யாழ் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையில் பாஸ் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அமைவாகவே பாஸ் நடைமுறையை மீண்டும் கொண்டுவருவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் பாஸ் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஆயிரத்து 250 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இவ்வாறிருக்கையில் ஒரு நோயாளரைப் பார்வையிடுவதற்காக அதிகமானோர் வருவதால் சேவைகள் சிறந்த முறையில் முன்னெடுப்பதில் சிரமம் நிலவுகிறது. இதனடிப்படையிலேயே பாஸ் நடைமுறை மீண்டும் கொண்டுவருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் யாழ்ப்பாணம் விமான நிலையம்!
பாடசாலை முதலாம் தவணை திங்களன்று ஆரம்பம் - தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளும் முன்னெடுப்பு ...
முன்னாள் இராயாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும அகால மரணம் - மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்த மூவின ...