யாழ். பல்கலையில் இன்று சோதனை நடவடிக்கை!

Friday, May 3rd, 2019

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 4 மணி முதல் சுற்றிவளைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் அதே போன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலையே இன்று யாழ் பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.

Related posts:

மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது - எதிர்வரும் 3 மாதங்களுக்கு...
சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
இந்தியா வழங்கிய கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட...