யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்!

Thursday, April 11th, 2019

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தையடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அமையவுள்ளது. இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் இந்து கற்கைகள் பீடத்தினுள் உள்வாங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை நிறுவிய காலத்திலிருந்தே இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் சேர்.பொன்.இராமநாதனின் கனவு இப்போது தான் மெய்ப்பட்டுள்ளதாக மூத்த கல்வியியலாளர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

Related posts:


ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் யாழ்.மாவட்ட மக்கள் வீதிக்கு வருவதை நாம் விரும்பவில்லை - யாழ் மாவட்ட இராணு...
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு - ல...
13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின்...