யாழ். பல்கலையின் பிரதித் துணைவேந்தர் நியமனம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறீசற்குணராசாவை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்படவுள்ளது என்று அறியமுடிகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பல்கலைக்கழக நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் பிரதித் துணைவேந்தர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
அதற்கமைவாக முன்னாள் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சி.சிறீசற்குணராசாவை பிரதித் துணைவேந்தராக நியமிக்க தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது பரிந்துரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
குடாநாட்டு பெண்களிடம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார ...
உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!
|
|