யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு
Thursday, February 9th, 2017
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக் கமறியல் எதிர்வரும்-23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று வியாழக்கிழமை(09) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் அநியாயமாக உயிரிழந்திருந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts:
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை!
20 மில்லியன் டொலர் உதவி வழங்கியது - அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் - தேசிய துக்கம் அனுஷ்ட...
|
|
|


