யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கம்!
Tuesday, January 5th, 2021
தடையை நீக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு தடையை நீக்குவதாக யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி சற்குணராஜா அறிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையையும் கருத்திற் கொண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக விதிக்கப்பட்ட வகுப்பு தடை நீக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ் உமேஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி யாழ். பல்லைக்கழகத்தில் எற்பட்டிருந்த இரு தரப்பினருக்கு இடையிலான மோதலின் பின்னர் 07 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில் 03 மாணவர்களுக்கு ஒரு வருட வகுப்புத்தடையும் 04 மாணவர்களுக்கு 06 மாத கால வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
கலைப்பிரிவின் மூன்றாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரியே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


