யாழ்.பல்கலைக்கழகத்துக்கு மேலும் பல கட்ட வசதிகள்!

யாழ்.பல்கலைக்கழக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கான உடற்பயிற்சிக்கூடக் கட்டடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான மருத்துவத்துறைக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ்.பல்கலைக்கழக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கான உடற்பயிற்சிக்கூட வேலைகள் இந்த மாத இறுதிக்குள் அரம்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவ துறையின் கட்டட நிர்மாண வேலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. வவுனியாவில் பிரயோக விஞ்ஞானபீடக் கட்டட நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசின் உதவியால் பொறியியல் பீடத்திற்கும் மற்றும் விவசாய பீடத்திற்குமான கட்டட நிர்மாணிப்பு வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஜப்பானிய அரசின் ஜெய்க்காவின் உதவி மூலம் இலங்கை மதிப்பில் 2410மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட பெரிய அளவிலான காணி ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது. இது விவசாய பீடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Related posts:
|
|