யாழ்.நகரை தொற்றுநோய்கள் தாக்கும் அபாயம்! எச்சரிக்கை!!

Monday, November 14th, 2016

கடந்த ஒருவாரமாக யாழ்ப்பாணத்தில் மாநகரபை சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தினால் குப்பைகள் அகற்றப்படாதுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புச் செய்துள்ளதுள்ளதுடன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 7ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருவதோடு, இப்போராட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மழை காலம் நடைபெறுவதாலும், குப்பைகள் அகற்றப்படாமையாலும் 

யாழ். மாநகர சபைக்குட்பட்ட சந்தை தொகுதிகள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், வீதிகள், கழிவு நீர் வாய்க்கால்கள் ஆகிய இடங்களிலே இவ்வாறு குப்பைகள் தேங்கி கிடந்து பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொது கழிப்பறைகளில் மலங்கள் அகற்றப்படாமையால் அவை பூட்டப்பட்டும் காணப்படுகின்றது.

குறிப்பாக யாழ். மாநகர சபையில் 382 சுகாதார தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்தில் உள்ள நிலையில் மேலும் 200 சுகாதார தொழிலாளர்கள் தேவைக்கேற்ற விதத்தில் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் அமைய அடிப்படையிலான சம்பளத்திலேயே பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே குறித்த அமைய அடிப்படையிலான பணியாளர்களையே நிரந்தரமாக்குமாறு கோரி மாநகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றை விட யாழ். மாநகர எல்லைக்குள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு இலட்சம் மக்கள் வந்து செல்லுகின்ற நிலையில் அவர்கள் பயன்படுத்துவதற்காக யாழ். பேருந்து நிலையம் வியாபார கட்டிடத் தொகுதி என்பவற்றுள் பொது மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்களின் கழிவுகள் தொடர்ச்சியாக ஏழு நாட்களாக அகற்றப்படாமையால் அக்கழிவு கிடங்குகள் நிரம்பி மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றன. இதனால் மலசலகூடங்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

137661878Untitled-5

Related posts:

இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது - ஶ்ரீல...
மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...