யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது நடவடிக்கை – முதலீட்டாளர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

யாழ். சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்தளை விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை, நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அதிபர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!
வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்காளியாக இயற்கை எரிவாயுக்கான நிறுவனம் இலங்கையில் அமைக்கப்படும் - அமைச்ச...
இலங்கை. இந்தியாவில் இருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் - கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்ன...
|
|